பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
11:04
திருநெல்வேலி:நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் தருமபதி மகாதேவ கோபாலகிருஷ்ணர் கோசாலையில் சித்திரை 18ம் பெருக்கு விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. விழா துவக்கத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி கோயிலில் சிறப்பு துலாபார பூஜை நடக்கிறது. 29ம் தேதி காலை 7 மணிக்கு மகாதேவ கோபாலகிருஷ்ணருக்கு பூர்ணாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, மாலை 5 மணிக்கு சித்தர்பீட பூர்ணாபிஷேகம், சிறப்புபூஜை, இரவு 12 மணிக்கு சிவபெருமானுக்கு சிறப்புபூஜை, பசும்படைப்பு நடக்கிறது. 30ம் தேதி காலை 5 மணிக்கு திருப்பாற்குடம் எடுத்து வருதல், 10 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கு பூர்ணாபிஷேகம், அலங்கார பூஜை, மாலை 5 மணிக்கு ராமதூத பக்த வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வடைமாலை, அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. மே 1ம் தேதி காலை 4 மணிக்கு சிறப்பு பூஜை, 9 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், பெரியபிராட்டி தாயார் திருக்காட்சி பூஜை, அய்யாவின் சிவிகை உலா, பகல் 11 மணிக்கு தருமபதியில் சிறப்பு அன்னமுத்திரை தர்மபூஜை, இரவு 9 மணிக்கு சிவசுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா நடக்கிறது. மே 2ம் தேதி காலை 6 மணிக்கு அரண்மனை பூஜை நடக்கிறது.