சிவபார்வதி, முருகன் தெய்வானை திருமணநாள் பங்குனி உத்திரம். இந்நாளில் பெண்கள் மாங்கல்ய பலத்திற்காக விரதம் மேற்கொள்வர். அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், கந்தசஷ்டிக்கவசம் பாடல்களைப் பாடுவர். மாலையில் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வர். இந்த விரதத்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கணவருக்கு நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் பெருகும். கருத்துவேறுபாடு மறைந்து தம்பதி ஒற்றுமை சிறக்கும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டால் அடுத்த பிறவி தெய்வப் பிறவியாக அமையும்.