திருமணம் தடைபடும் பெண்கள் பங்குனி உத்திரத்தில் முருகனை வழிபடுவது நல்லது. இந்நாளில், செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசுவாமியையும், அங்கிருக்கும் செவ்வாயையும் வணங்கினால் திருமணத்தடை நீங்கும். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் செவ்வாய்க்கிழமையில் வருவது இன்னும் சிறப்பு. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செல்ல இயலாதவர் கள் கந்தசஷ்டிக்கவசத்தைப் பாராயணம் செய்து, அருகிலுள்ள முருகன் கோயிலில் நெய்தீபம் ஏற்றலாம்.