Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மகரம்: இடியாப்ப சிக்கல் தேவை நிதானம்! மகரம்: இடியாப்ப சிக்கல் தேவை நிதானம்! மீனம்: உறவுகள் பகைக்கும் வருமானம் குறையும்! மீனம்: உறவுகள் பகைக்கும் வருமானம் ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை)
கும்பம்: புதுவீடு வாங்கலாம் வாகனமும் ரெடி!
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
17:37

சிறிய பணியையும் பொறுப்புடன் நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது ராசிக்கு மூன்றாம் இடத்தில் அனுகூலமாகவும், சனி, ராகு ஒன்பதாம் இடத்தில் சிரமம் தரும் குணத்துடனும் உள்ளனர். ராசிக்கு நான்காம் இடத்தில் உள்ள குரு, மே28ல் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி, ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். இதனால் மனதில் புத்துணர்வும் புதிய சிந்தனைகளும் பெறுவீர்கள்.உங்களின் ஒவ்வொரு பேச்சும் செயலும் இனிதாக அமைந்து புண்ணியம் தேடித்தரும். அதிக உழைப்பிற்கு ஆளாக வேண்டியிருந்தாலும் போதுமான பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்திடுவர். அவர்கள் படிப்பு, திறமை வளர்ப்பில் முன்னேற்றம் பெற அதிக கவனம் செலுத்துவீர்கள். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். இளம் வயதினருக்கு சிறப்பாக திருமணம் நடக்கும்.எதிரிகளால் தொந்தரவு அணுகாத சுமூக நிலை உருவாகும். நீண்டகால கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். கணவன், மனைவி எதிர்கால திட்டங்களைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்துடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வும், உறவினர்களின் வருகையும் அமைந்து மகிழ்ச்சி, குதூகலம் உருவாகும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அனுகூல சூழ்நிலை அமைந்து திட்டம் நிறைவேறும். நண்பர்கள் உங்களின் திறமை வளர உதவும் வகையில் புதிய வாய்ப்புக்களை பெற்றுத்தருவர். தேவைகள் திருப்திகரமாக பூர்த்தியாகும். வசதி அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் பாசத்துடன் நடந்து உங்களுக்கு பயன்படுகிற நல்ல ஆலோசனை வழங்குவர்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த அபிவிருத்தி பணிகளை நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள். வியத்தகு வளர்ச்சியும் உபரி பணவரவும் பெறுவீர்கள். உற்பத்தி அளவு, தரம் அதிகரித்து மனதில் உற்சாகம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானத்தை மேம்படுத்தும். பயனுள்ள தொழில்நுட்ப இயந்திரங்களை தாராள செலவில் வாங்குவீர்கள். பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சலுகை வழங்குவீர்கள். கூடுதல் தொழில் துவங்க திட்டமிடும் முயற்சி எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள். தொழில திபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும்.

வியாபாரிகள்: அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கும். புதிய நிறுவனங்களின் அறிமுகத்தால் சரக்குகளை அதிக அளவில் கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு திருப்திகரமாக கிடைத்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள். கூட்டாக வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் விற்பனை அதிகரித்து அதிக லாபம் பெறுவர். சக வியாபாரிகள் உங்களுக்கு உரிய கவுரவம் தருவர்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுகிற வகையில் பொறுப்புணர்வுடன் செயல்படுவர். குறித்த காலத்திற்கு முன்பே வேலைகளை முடித்து நற்பெயர் பெறுவீர்கள். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் தேவையான ஒத்துழைப்பு தருவர். தேவையான உதவிகளை மனமுவந்து வழங்குவர். இளம் பணியாளர்களுக்கு திருமண முயற்சி எளிதில் கைகூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அதிக சுறுசுறுப்பு, தெளிவான மனதுடன் பணி மேற்கொள்வர். இலக்கு நிறைவேறி நற்பெயரும் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் நல்ல குணங்களை மதித்து நடந்து கொள்வர். குடும்பத்தேவை தாராள செலவில் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் விரும்பிய வகையில் வாங்குவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து உபரி பணவரவு பெறுவர். இளம்பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

மாணவர்கள்: லட்சிய மனதுடன் படிப்பில் முன்னேற்றம் அடைவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். பெற்றோரின் அன்பு, பாசம் உங்கள் மனதில் புதிய நம்பிக்கையை வளர்க்கும். சக மாணவர்களுடன் நட்பு வளரும். படிப்புக்காக பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புண்டு. படித்து முடித்து, வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான பணி, திருப்திகரமான சம்பளம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கருணை நிறைந்த மனதுடன் ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களுக்கு, உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். நீண்டநாள் எதிர்பார்த்த கவுரவமான பதவியை புதிய முயற்சியினால் பெறுவீர்கள். உங்களின் அரசியல் பணி சிறக்க புத்திரர்கள் உறுதுணையாக செயல்படுவர். தலைமையிடம் நற்பெயரும், தாராள பணவரவும் பெறுவர்.

விவசாயிகள்: இடுபொருட்கள், பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். பணப்பயிர்களை பயிரிட்டு, தாராள மகசூல் பெறுவீர்கள். சந்தையில் தானியங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் உபரி பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவீர்கள்.

செல்ல வேண்டிய கோயில்: திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்

பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.

பரிகார பாடல்: செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்க
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை) »
temple
பெற்றோர் மீது அன்பு கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குரு, சனி பார்வைகளால் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே! சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது ... மேலும்
 
temple
பொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.