பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை விழாவை யொட்டி, ஏப்.,21ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா ஏப்.,14ல் துவங்கி 25 வரை நடக்கிறது. ஏப்.,14ல் காலை 10.46 மணிக்கு மேல் காலை 11.10 மணிக்குள் கொடியேற்றமும், ஏப்.,21 இரவு 7.35 மணிக்குமேல் இரவு 7.59 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏப்.,22ல் அம்மனின் திக்குவிஜயமும், ஏப்.,23ல் காலை 8.17 மணிக்கு மேல் காலை 8.41 மணிக்குள், திருக்கல்யாணமும், ஏப்.,24ல் காலை 6 மணிக்கு மாசிவீதிகளில் தேரோட்டமும் நடக்கிறது.