பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலுக்குள், நிறுவப்பட்டுள்ள, திருவள்ளுவர் சிலை, பராமரிப்பு பணி, துவங்கியது. கன்னியாகுமரி, கடலுக்குள் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. கடலுக்குள் உள்ளதால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முறையாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், உப்புக்காற்றில் சிலை சேதம் அடைய வாய்ப்பு ஏற்படும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி நடைபெற வில்லை. இதனால், சிலை, சேதமடைய தொடங்கியது. திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகளை உடனே மேற்கொள்ளாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்தார். தாடர்ந்து, பராமரிப்பு பணிக்காக 81 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. அந்த நிதியில், சிலையை சுற்றி இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. அது நிறைவு பெற்ற நிலையில், தண்ணீரால் சிலையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் பண முழுமையாக நிறைவு பெற்ற பின், திருவள்ளுவர் சிலைக்கு பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.