பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
சபரிமலை:விஷுக்கனி உற்சவத்திற்காக, சபரிமலை நடை, வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது.சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷுக்கனி உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும், 10ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் காலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் துவங்கும்.விஷுக்கனி உற்சவம், 14ம் தேதி அதிகாலை நடைபெறும். அன்று, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காணிக்கையாக, நாணயங்களை அர்ச்சகர்கள் வழங்குவர்.தொடர்ந்து, 18ம் தேதி வரை பூஜைகள் நடந்து, அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் அன்னதானம்: .விஷூக்கனி உற்சவ காலங்களில் பக்தர்களுக்கு தேவையான உதவிகள் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் செய்யப்பட உள்ளன. மேலு<ம் காலை, மதியம், இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். குடிநீர் வழங்குதல், ஸ்டெரச்சர் சர்வீஸ் போன்ற சேவைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அகில பாரத ஐயப்ப சேவா சங்க, தமிழ் மாநில அமைப்புத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் க.ஐயப்பன் தெரிவித்துள்ளனர்.