பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
தேனி:ஏப்ரல் 25ல் நடக்கும், மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவில், பொங்கல் வைத்து, மேளம் கொட்டி வழிபாடு நடத்த, கேரள வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.கண்ணகி கோவில் முழுவதும், தமிழக வன எல்லைக்குள் அமைந்திருந்தாலும், கேரளா வழியாகச் சென்று தான் வழிபாடு நடத்த வேண்டும். ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியில் தமிழக, கேரள பக்தர்கள் அதிகளவில் வழிபடுவர்.இதற்கு முன், வனத்திற்குள் பொங்கல் வைக்கவும், மேளம் கொட்டவும், அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தமிழக பக்தர்கள், பொங்கல்வைத்ததை, கேரள அதிகாரிகள் தடுத்தனர்."இந்த ஆண்டு, பொங்கல் வைக்கவும், மேளம் கொட்டவும் அனுமதிக்க வேண்டும் என, விழாவுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், இருமாநில பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.தமிழகம், கேரளா சார்பில் தலா மூன்று இடங்களில், பொங்கல் வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தலா, ஐந்து "செட் மேளம் கொட்டலாம். கடந்த ஆண்டு, தமிழக பக்தர்களுக்கு, ஐந்துடிராக்டர்களில் உணவு எடுத்துச் செல்லப்பட்டது; நடப்பு ஆண்டில், ஏழு டிராக்டர்களில் உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.