பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், கடந்த, 2ம் தேதி காலை, கொடியேற்றத்துடன், பங்குனி பிரம்மோற்சவம் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடந்தது. ஆறாம் நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, சப்பரத்தில் ஸ்ரீவேணுகோபாலன் திருக்கோலத்தில், பெருமாள் வீதியுலா வந்தார். மாலை, 6:00 மணிக்கு, யானை வாகனம் உற்சவம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு சுவாமி திருத்தேரில், எழுந்தருளுகிறார். 7:00 மணிக்கு வடம் பிடித்தல், நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு, திருத்தேரில் இருந்து திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை பிற்பகல், 2:00 மணிக்கு தொட்டித் திருமஞ்சனம் உற்சவமும், மாலை, 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில் திருமங்கையாழ்வார் வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன.