ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் உடல் மாரியம்மன் கோவிலில் சரித்திர பாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. ரிஷிவந்தியம் உடல் மாரியம்மன்கோவிலில் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஊரணி பொங்கல் விழா நடக்கிறது. அதையொட்டி தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ அலங்கார ஆராதனைகளும் நடந்து வருகிறது, மாலை மற்றும் இரவு வேளைகளில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நிகழ்ச்சி பூசாரி கொளஞ்சி தலைமையில் நடந்து வருகிறது. மாரியம்மன் பிறப்பு, காத்தவராயன் மோடி எடுத்தல், கழுமரம் ஏறுதல், ஆரியமாலா திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட பாடல் சொற்பொழிவு நடக்கிறது. வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ஊரணி பொங்கல் விழா நடக்கிறது.