பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
திருநெல்வேலி: ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் நித்திய கல்யாணி அம்பாள் கோயில் சித்திரை பெருந்திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடந்து வருகுகிறது. இந்த ஆண்டு வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம், மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில் 25ம் தேதி வரை தினமும் காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் கும்பாபிஷேகம், இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா கட்டளைதாரர்கள் சார்பில் நடக்கிறது. 7ம் திருவிழாவான 21ம் தேதி இரவு 9 மணிக்கு நடராஜர் சப்பரம், ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, 8ம் திருவிழாவான 22ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் வெள்ளைசாத்தி, மாலை 6 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா நடக்கிறது. 9ம் திருவிழாவான 23ம் தேதி காலையில் அபிஷேக ஆராதனைகள், 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், இரவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி 11ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் தனலட்சுமி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.