வேம்பு மாரியம்மன் கோவிலில் ஏப்.,12ல் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2013 11:04
கரூர்: பசுபதிபுரம் வேம்புமாரியம்மன் கோவிலில், நாளை சித்திரை திருவிழா துவங்குகிறது. பிரசித்தி பெற்ற வேம்புமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நாளை மாலை 6 மணிக்கு, கரகம் ஊர்வலத்துடன் விழா துவங்குகிறது. வரும் 9 ம் தேதி மாலை 4 மணிக்கு திரு விளக்கு பூஜை, 12 ம் தேதி மாலை பூச்செரிதல் விழா, 13 ம் தேதி இரவு கலை நிகழ்ச்சி, 14 ம் தேதி காலை பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு பூஜை, 15 ம்தேதி காலை அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், 16ம் தேதி காலை பால்குடம் எடுத்தல், அன்ன தானம் வழங்குதல், 17 ம்தேதி கரகத்தை ஆற்றுக்கு அனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.