மேலூர்: மேலூர் அருகே திருவாதவூரில், திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான இங்கு 1999ல் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோயிலுக்குள் கமலம் பெயின்ட்டிங் பணிகள் முடிவுற்றன. தற்போது அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ராஜகோபுரத்தில் வண்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன. பணிகள் முடிந்த பிறகு கும்பாபிஷேக தேதி குறிக்கப்படும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்து வருகின்றனர். பொங்கல் விழாபேரையூர்பேரையூரில் காளியம்மன் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் விரதம் இருந்து வழிபட்டனர். இரவு அம்மன் ஊர்வலம் நடந்தது. முளைப்பாரி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.