சேலம்: சேலம், அம்மாப்பேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்று விழா நடந்தது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் கண்ணன், வேதமூர்த்தி ஆகியோர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்று விழாவை துவக்கினர். நேற்று மாலை, 7 மணிக்கு தீப அலங்காரத்துடன், ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் மாலை நேரம் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.