நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2013 11:04
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில், 456ம் ஆண்டு கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை அடுத்த நாகூரில் பழமையான ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு, 456ம் ஆண்டு கந்தூரி விழா, துவங்கியது. நேற்று காலை 11 மணிக்கு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. தர்காவில் உள்ள, ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஏற்றப்பட்டு நாகையில் 40 வீதிகள், நாகூரில் 14 வீதிகள் வழியாக வலம் வந்து, இரவு 10 மணிக்கு தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், தர்காவில் உள்ள 5 மினவராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது.