விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2013 11:04
விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப பெருவிழா துவங்கியது.விழுப்புரம் ஆஞ்சநேய சுவாமி கோவில் லட்சதீப பெருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் நாள் உற்சவத்தையொட்டி, இரவு ஆஞ்சநேயர் சுவாமி எலக்ட்ரிக் விமானத்தில் வீதியுலா நடந்தது. நேற்று நடந்த இரண்டாம் நாள் உற்சவத்தில் சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து வரும் 14ம் தேதி தமிழ் ஆண்டுப் பிறப்பையொட்டி, லட்சதீப பெருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு துவங்கி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகளும், மாலையில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளும் நடக்க உள்ளது. முன்னதாக காலை 9 மணிக்கு குளக்கரையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம் நடக்கிறது. லட்சதீபத்தையொட்டி இரவு சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.வரும் 19ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.