பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
சிவகாசி: திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தங்கல் எட்டு சமூகத்தார் உறவின்முறை பொது மகமைபண்டு சார்பில், மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா ,14 நாட்களாக நடைபெறுகிறது. அம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, மண்டகபடிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், கயிறு குத்து, ஆயிரம் கண் பானை, முளைபாரி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று, அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பெண்கள் பக்தியுடன் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேரானதுரதவீதிகளில் உலா வந்து, நிலைக்கு வந்தது. ஏற்பாடுகளை தலைவர் ராமசாமி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பாலகுரு, துணைத் தலைவர் அர்ச்சுனன், துணை செயலாளர் ராஜராம், ஆலோசகர் பால்ராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.