தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருமாள் குடகனாற்றில் எழுந்தருளி, மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்வாக சித்திரை திருவிழா கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற ஏப். 24 ம் தேதி சித்திரை திருவிழா துவங்குகிறது. அன்று மாலை கோயிலிருந்து பெருமாள் பல்லக்கில் புறப்பாடு ஆகி, திருக்கண் மற்றும் மண்டகப்படிகளை தொடர்ந்து இரவு தங்கல் முடித்து மறுநாள் காலை குடகனாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திண்டுக்கல் நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். திண்டுக்கல்லில் சுவாமி எதிர்சேவைகள் மற்றும் மண்டகப்படிகள் முடித்து, வரும் ஏப். 30 பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.