மங்குழி பகவதி கோவில் பூஜை மவுன்டாடன் செட்டி மக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2013 11:04
கூடலூர்: கூடலூர் மங்குழி பகவதி அம்மன்கோவில் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கூடலூர் மங்குழி பகுதியிலுள்ள மவுன்டாடன் செட்டி மக்கள் தங்கள் இடங்களில் விளைந்த அனைத்து வகைகளையும் எடுத்து வந்து, மங்குழி பகவதி அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியை, "சில்லான பூஜை என்ற பெயரில் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான துவக்க விழா 15 நாட்களுக்கு முன் துவங்கியது. அதற்காக மங்குழி பகுதியில் விளைந்த வாழை தார் ஒன்றை வெட்டி, கோவிலுக்கு காணிக்கை செலுத்தினர். அதனை தொடர்ந்து, சில்லான பூஜை துவங்கியது. மங்குழி பகுதியை சேர்ந்த விவசாய ஒருவரின் இடத்தில் விளைந்த இளநீர், வெற்றிலைகளை பறித்து, அதனை வெள்ளை வேட்டியில் கட்டி பூஜை செய்து, ஊர்வலமாக மங்குழி அம்மனுக்கு கோவிலுக்கு எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். பின்பு, நள்ளிரவு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் அங்கு கட்டியிருந்த இளநீர், அவிழ்க்கப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கப்பட்டது.