எல்லோருக்கும் பக்தி உண்டு திருச்சி கல்யாணராமன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2013 10:04
திருநெல்வேலி: எல்லோருக்கும் பக்தி உண்டு என நெல்லையில் ஒரு ஆண்டு முழுவதும் நடக்க உள்ள கம்பராமாயண சொற்பொழிவை திருச்சி கல்யாணராமன் நேற்று துவக்கி பேசினார். புத்தாண்டு தினத்தைமுன்னிட்டு நேற்று பாலகாண்டத்தில் விளக்க உரையாற்றினார்.தொடர்ந்து அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஒவ்வொரு காண்டத்திலும் சுமார் இரண்டு மாதங்கள் பேசுகிறார். 2014 ஏப்ரல் 13ல் நிறைவு செய்கிறார். நேற்றைய துவக்க விழாவில் பேசுகையில், எல்லோருக்கும் பக்தி உள்ளது. எதைப் பிடிக்கிறதோ அதைப் பற்றிக்கொள்கிறோம். கடவுள் குணக்கடல் ஆவான். கம்பரோ ராமனை நற்குணக்கடல் என்கிறார்.வேதத்தில் ஹரிஓம் என துவங்கி ஹரிஓம் என நிறைவு செய்வார்கள். ஹரி நாமத்தை தெரிந்து சொன்னாலும். தெரியாமல் சொன்னாலும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். 12 ஆயிரம் பாடல்கள் எழுதிய கம்பன், என்னால் ஒன்றும் இல்லை என்கிறார். ஆனால் இன்றைக்கு பலரும் தமக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்பது போல பேசுகின்றனர். கம்பன், ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ய மிகுந்த சிரமப்பட்டுள்ளார். ஒரு குருவை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் பாதம் பற்றினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.