மார்கழி பிறப்பு; தனது தங்கைக்கு சீர் வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2025 10:12
திருச்சி; மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் வைபவம் விமர்சையாக நடந்தது. இதனையொட்டி ரங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்திலிருந்து, கோயில் நிர்வாகிகள் பட்டுப்புடவைகள், மங்கலப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை மேள தாளம் முழங்க கொண்டு வந்தனர். இந்த சீர்வரிசை திருவானைக்காவல் ஜம்புகேசுவரரர் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.