திருப்பதி கோவிலுக்கு வெளி நாட்டு பக்தர் ரூ.16 கோடி நன்கொடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2013 10:04
திருப்பதி: அமெரிக்காவை சேர்ந்த வெளி நாட்டு பக்தர் ஒருவர் சுமார் 16 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: வெளி நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் இவ்வளவு அதிகமான தொகையை நன்கொடையாக அளிப்பது என்பது இது முதல் முளையாகும். அவர் அளித்துள்ள தொகையில் சுமார் ரூ.11 கோடிதொகையில் சகஸ்ரநாம மாலை தயாரிக்கவும் மீதமுள்ள ஐந்து கோடி ரூபாயில் இலவச உணவு அருந்தும் கூடம் கட்டவும் பயன்படுத்தப்படும் என கூறினர். மேலும் இந்தாண்டின் மார்ச் மாதம் 27-ம் தேதி சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று சுமார் 2 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தது. இதனையடுத்து தற்போது வெளிநாட்டு பக்தர் ஒருவர் நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.