பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
காரிமங்கலம்: காரிமங்கலம் அக்ரஹாரம், ஸ்ரீ ராமர் கோவிலில், ராமநவமி உற்சவ விழா நாளை துவங்கி, 29ம் தேதிவரை நடக்கிறது. நாளை காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 22ம் தேதி காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், இரவு, 7 மணிக்கு சீதா ராம கல்யாண வைபவம் நடக்கிறது. விஜயா கேப் குடும்பத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 23ம் தேதி சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், இரவு, 7 மணிக்கு வசந்த உற்சவமும், 28ம் தேதி சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், இரவு, 8 மணிக்கு சயன உற்சவமும் நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், இரவு, 8 மணிக்கு அனுமன் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தூர்வாசர் ஸ்ரீதர், கணேஷ், உதயசங்கர் மற்றும் ராம நவமி விழா குழுவினர் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி ஸ்ரீவிவேக வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு அதிகாலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடை மாலை சாத்துதல் நடக்கிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தியேட்டர் உரிமையளர் சங்க தலைவர் கோவிந்தன், பஞ்சாயத்து தலைவர் வக்கீல் மகேஷ்குமார், யூனியன் சேர்மன் தமிழ்செல்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் குருக்கள் குப்புசாமி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.