பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
ராசிபுரம்: கைலாசநாதர் கோவிலில், ஏப்ரல், 25ம் தேதி தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் கொடியேற்றப்பட்டது. ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் தர்மசம்வர்த்தினியுடன் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 15ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் கொடியேற்று விழா நடந்தது. ஏப்ரல், 23ம் தேதி வரை தினமும் இரவு, 7 மணிக்கு, மயில், பூதம், சிம்மம், ரிஷபம், யானை, குதிரை, புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி ச்துதிருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல், 24ம் தேதி மாலை, 5 மணிக்கு ஹஸ்த நட்சரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு மகா அபிஷேகம், காலை, 7 மணிக்கு ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை, 4 மணிக்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது. 26ம் தேதி தேர் நிலை சேருகிறது. 29ம் தேதி மாலை சத்தாபரணம், 30ம் தேதி நடராஜர் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.