கன்னியாகுமரி பகவதி கோயிலில் 22 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமிரா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2013 12:04
கன்னியாகுமரி :கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கோயிலில் 22 இடங்களில் அதி நவீன கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் கூட்டநெரிசலை பயன்படுத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகளை திருடுவது, இடையூறு செய்வது போன்ற சம்பவங்களை தடுக்கவும் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தவும் கோயிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்த தேவசம் போர்டு நிர்வாகம் முடிவுசெய்தது. இதன் படி பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து 22 இடங்களில் கேமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி கோயில் முன்புறம், பாலசவுந்தரி அம்மன், காலபைரவர், மூலஸ்தான மண்டபம், வாடாவிளக்கு, உள்பிரகாரம், கொடிமரமண்டபம், சூரியபகவான் தர்மசாஸ்தா சன்னதி உட்பட 22 இடங்களில் கேமிரா பொருத்தப்படவுள்ளது.