பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
11:04
செட்டிவாரிபள்ளி: சீதா, லட் மண சமேத கோதண்டராமர் கோவிலில்,நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பெங்களூரைச்சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிர õம பு ர ம் ஊராட்சியைச்சேர்ந்தது செட்டிவாரிபள்ளி கிõமம். இந்த ஊரில், 96ஆண்டுகள் பழமையான கோதண்டாமர் கோவில் உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, கோவில் புனரமைப்புபணிகள் நடந்து வந்தன. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்,பலரும், தங்கள் தொழில் நிமித்தமாக, கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருகின்றனர். உள்ளூர்மற்றும் பெங்களூரில் வசிக்கும் செட்டிவாரிபள்ளி மக்களின் பங்களிப்புடன், கோவில் புனரமைப்புபணிகளாக, சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, ராமநவமி தினமான நேற்று காலைகும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்தபுதன்கிழமை யாகசாலை பூஜை, நடத்தப்பட்டது.நேற்று யாகசாலையில் இருந்து கலசங்கள் ஊர்வலமாககோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.இன்று இரவு கருட வாகன சேவையும், நாளைஅனுமந்த் வாகனத்திலும் உற்சவர் அருள் பாலிக்கிறார்.வரும் செவ்வாய்கிழமை பிரம்மோற்சவம் நடக்கிறது. புதன்கிழமை சீதா ராமர் திருக்கல்யாணம் நடைபெறஉள்ளது.