பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
11:04
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் தேங்காய் பழ கடைகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை, 1.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், இந்த கோவிலில் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்தி கடனை நிறைவு செய்வர்.குண்டம் விழா மட்டுமின்றி, கடந்த சில ஆண்டாக பண்ணாரி மாரியம்மன் கோவிலில், தினமும் தமிழகம், கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பண்ணாரி மாரிம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.இதனால் கோவில் வளாகங்களில் தனியார் தேங்காய் பழ கடை மற்றும் உணவு விடுதி, பக்தி பாடல் சி.டி., கடை, டீ கடை, பிரசாத ஸ்டால் என பல்வேறு வகையான கடைகள், ஏலம் முறையில் கோவில் நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெற்று வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஏலம் மூலம், இக்கடைகள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும்.இந்த ஆண்டுக்கான ஏலம் நேற்று கோவில் வளாகத்தில், துணை ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஒப்பந்ததாரர்கள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர்.அனைத்து கடைகளும் சேர்ந்து, 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.