உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், இன்று கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உடுமலை மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் போடுதல் நிகழ்ச்சி இன்று இரவு 8:00 மணிக்கு மேல் 8:15மணிக்குள் நடைபெறுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள விநாயகர் கோவிலிலிருந்து கம்பம் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கம்பம் ஸ்தாபனம் செய்யப்படுகிறது. 26ம் தேதி கொடியேற்றம், மே 2ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.