பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டிவீரன்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் மண்டபம், சிலைகள், கோபுரங்கள் புதிதாக ரூபாய் ஒரு கோடி செலவில் கட்டப்பட்டது. ஆகமவிதிப்படி மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள்பெற்றனர். கணபதி, பத்திரகாளியம்மன், கருப்புசாமி, நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மதுரை, ஸ்தபதி ராமமூர்த்தி குழுவினர் சிலை, கோபுரங்களை வடிவமைத்தனர். கற்கோபுரத்தை திருச்சி, சிற்பி ராஜா வடிவமைத்தார். கும்பாபிஷேக பூஜைகளை திருவிடைமருதூர் கண்ணப்ப குருக்கள், அய்யம்பாளையம் திருநாவுக்கரசு குருக்கள் நடத்தினர். நாடார் சங்க தலைவர் அசோக்பாபு, உப தலைவர் மோகன் குமார், செயலாளர் தீனதயாளமூர்த்தி, இணைச்செயலாளர் அய்யனார் வெங்கடேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், அன்புச்செழியன், கோபிநாத், விஜயவேல், முரளி, மோகன் அருணாச்சலம், ராஜேந்திரபிரசாத், சங்கரலிங்கம், ராஜாராம், காமராஜ், பிரசன்னா ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.