பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலில், ராம நவமி உற்சவத்தை யொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில் ராம நவமி உற்சவம், நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், 2.85 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளனர்.மேலும், 173 கிராம் தங்கம், 22 வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் இருந்தன. கடந்த ஆண்டு ராம நவமி உற்சவத்தின்போது, 696 கிராம் தங்கம், காணிக்கையாக கிடைத்ததாக, கோவில் உதவி செயல் நிர்வாக அதிகாரி, யஸ்வந்த் பானே தெரிவித்தார்.