நன்மை தரும் விநாயகர் கோயிலிற்காக 28 அடி உயர பிள்ளையார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2013 11:04
திண்டுக்கல்: ஒரே கல்லில் சிருஷ்டிக்கப்பட்டுவரும் 28 அடி உயர பிள்ளையாரை, திண்டுக்கல் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்கான பூமி பூஜை, நடந்தது. பல்வேறு பெயர்களில் வரங்களை அளிக்கும் 108 விநாயகர்கள் திண்டுக்கல் கோபாலசமுத்திரத்தில் உள்ள நன்மை தருவார் கோயிலில் குடிகொண்டுள்ளனர். ஒரே இடத்தில் இத்தனை விநாயகர்களை ஒருசேர பார்ப்பது அரிதானது என்பதால், இந்த கோயில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாநில பக்தர்களுக்கும் வியப்பிற்குரிய கோயிலாக அமைந்துள்ளது. தற்போது, இந்த கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரே கல்லில் சிருஷ்டிக்கப்பட்ட 28 அடி உயர பிள்ளையாரை, நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இதற்காக கோயிலின் ராஜகணபதி சந்நிதியில் திருவுளச்சீட்டு எடுக்கப்பட்டு, அதில் குறிப்பிட்டிருந்தபடி ஊத்துக்குளி பாறையில் சிலை சிருஷ்டிப்பதற்கான கல் தேர்வு செய்யப்பட்டது. திருப்பூர் அருகில் உள்ள திருமுருகன் பூண்டி, முருகன் சிற்ப கலைக்கூடத்தில், ஸ்தபதி சண்முகவேல் தலைமையில் சிலை சிருஷ்டிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோயிலில் இச்சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தில் பூமி பூஜை நடந்தது. 6 மாத காலத்திற்குள், இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் பொறுப்பாளர் மருதநாயகம் தெரிவித்தார்.