பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
11:04
சிவகங்கை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் தேரோட்டம் நடந்தது. சிவகங்கை, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில், சித்திரை திருவிழா, ஏப்.,16 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். தேரோட்டம்: விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (ஏப்.,24) காலை 9.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள், சோமநாதர் பிரியாவிடையுடன் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். காலை 10.05 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனி தேரிலும், ஆனந்தவல்லி அம்பாள் தனி தேரிலும், பிரியாவிடையுடன் சோமநாதர் தனி தேரில் எழுந்தருளினர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி, காலை 11 மணிக்கு நிலையை அடைந்தது. மானாமதுரை டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.