Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மத்திகிரி கோட்டை மாரியம்மன் உற்சவ ... செல்லபிராட்டி கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
11:04

ராசிபுரம்: கைலாசநாதர் கோவிலில் சித்தரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி தர்மசம்வர்த்தினியுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, கடந்த, 15ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, மகா அபிஷேகம், 7 மணிக்கு ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளினார்.மாலை, 4 மணிக்கு, நகராட்சி சேர்மன் பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் வெங்கடாஜலம், கோவில் செயல் அலுவலர் ராஜாராம் உள்ளிட்டோர் முன்னிலையில், தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.திருத்தேர் ராஜவீதி வழியாக சென்று, கடைவீதியில் நிறுத்தப்பட்டது. நான்கு நாட்கள் நடக்கும் திருத்தேரோட்ட நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இன்று (ஏப்., 26) தேர் நிலை சேர்கிறது. ஏப்ரல், 29ம் தேதி மாலை, 6 மணிக்கு சத்தாபரணம், 30ம் தேதி நடராஜர் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar