பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் மலைப்பாதையில் குவிந்துள்ள ஜோசியர்களிடம், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமாக கிளி ஜோதிடம் பார்த்து செல்கின்றனர்.ஓசூரில் மலை மீது சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழக, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில பக்தர்கள், தினம் கார்கள், வேன்களில் வந்து செல்கின்றனர். மேலும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, சூளகிரி உள்ளிட்ட உள்ளூர் மாவட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்த ஸ்வாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், கோவில் மலைப்பாதையில் ஏராளமான ஜோதிடர்கள் அமர்ந்து, பக்தர்கள் எதிர்காலத்தை கணித்து கூறும் கிளி ஜோதிடம் பார்க்கின்றனர். ஆண், பெண் பக்தர்கள், தங்கள் எதிர்காலம், தங்கள் குழந்தைகள் எதிர்காலம் மற்றும் தொழில் வியாபாரம் தொடர்பாக ஜோசியர்களிடம் கிளி ஜோதிடம் மூலம் கணித்து செல்கின்றனர். வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி, கோவிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களும், இந்த மலைப்பாதை ஜோதிடர்களிடம் விரும்பி ஜோதிடம் பார்த்து செல்கின்றனர்.