புலீஸ்வரியம்மன் கோவில் திருப்பணி செய்வதில் சிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2013 01:04
மயிலாடுதுறை: கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவில் திருப்பனி செய்ய அனுமதி கொ டுக்காமல் கால தாமதம் செய்வதாக இந்து சமய அறநிலையத்துறை மீது மக் கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் புலீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அசரிரீ வாக்குப்படி கொ ள்ளிடம் ஆற்றில் இருந்து வைஷ்ணவி உள்ளிட்ட சப்மமாதர் சிலைகளை தீ த்துக்கடி கிராம மக்கள் எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் புலிப்பானி சித்தர் தங்கி அம்பாளை வழிபட்டதால் அம்பா ள் புலீஸ்வரியம்மன் என்றழைக்கப்படுவதாகவும், அம்பாளை வழிபட்டால் நாராயணனின் பூரண அருளும், சித்தர்களின் நல்லாசியும் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும் பாபிஷேகம் கடந்த 1998ம் ஆண்டு நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண் டுகள் கடந்த நிலையில் ஊர் நாட்டாமை கலியபெருமாள் தலைமையில் 10 உ பயதாரர்கள், 23 கிராம முக்கியஸ்தர்கள் கூடி ரூ80 லட்சம் செலவில் கோவில் திருப்பனி செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்தனர். அதன்படி கிராம முக்கியஸ்தர்கள் கோவில் திருப்பனி செய்ய உபயதாரரான ஞானமணி என்பவருக்கு அனுமதி வழங்க கோரி இந்து சமய அறநிலையத்து றை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இது வ ரை அனுமதி கிடைக்கவில்லை. திருப்பனி செய்து கும்பாபிஷேகம் நடத்த மு டியாததால் தெய்வ குற்றம் ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சுகின்றனர். நாட்டாமை கலியபெருமாள் கூறுகையில் புலீஸ்வரியம்மன் 23 கிராம மக் களுக்கு கண்கண்ட தெய்வமாகும். கோவில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண் டுகள் கடந்த நிலையில் திருப்பனி நடத்த முடிவு செய்தோம். ஸ்தபதி ஞானம ணி உள்ளிட்டோர் பண உதவி செய்ய முன்வந்துள்ளனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்காம ல் கால தாமதம் செய்துவருவதுடன், திருப்பனிக்கு செலவிடும் தொகையை டெப்பாசிட் செய்தால் குழு அமைத்து திருப்பனி செய்ய நடவடிக்கை எடுப் பதாக கூறுகின்றனர். பொது மக்களிடம் வசூல் செய்யும் தொகையை தான் இந்து சமய அறநிலை யத்துறையிடம் டெப்பாசிட் செய்ய வேண்டும். டோனர்கள் மூலம் திருப்ப னி செய்ய டெப்பாசிட் செய்ய வேண்டியதில்லை. குழு அமைத்து திருப்பனி செய்யப்படும் என கூறப்படுவதால் முறைகேடு ஏற்படும் என டோனர்கள் அஞ்சுகின்றனர். இதனால் கோவில் திருப்பனி ö சய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இது பற்றி எம்.எல்.ஏ, அமைச்சரிடம் முறையி ட்டும் எந்த பயனுமில்லை என தெரிவித்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்பதற்காக தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.