பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
சீரடி: சீரடி சாய்பாபா கோவில், இந்த ஆண்டு வசூல், 305.39 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டு வருவாயை விட, 30 கோடி ரூபாய் அதிகம். இதில், நன்கொடையாக, 176 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 22 நாடுகளில் உள்ள, 10 கோடி ரூபாய் மதிப்பு கரன்சி, 15.56 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகள், காசோலைகளும் கிடைத்து உள்ளன. கடந்த நிதியாண்டில், 860 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக வைத்துள்ளது. 300 கிலோ தங்கம், 3,000 கிலோ வெள்ளி உள்ளிட்டவையும், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.