உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் 11ம் தேதி பிரதோஷ சித்திரை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2013 11:05
திசையன்விளை: உவரி கோயிலில் பிரதோஷ சித்திரை பெருவிழா வரும் 11ம்தேதி நடக்கிறது. உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் 351வது பிரதோஷ சித்திரை பெருவிழா வரும் 11ம்தேதி நடக்கிறது. விழாவில் காலையில் நெல்லையப்பர் பஜனைக்குழு திருவாசகம் முற்றோதுதல்,சுயம்புலிங்கசுவாமி மகா அபிஷேகம், நந்தீஸ்வரர் அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை, மதியம் அன்னதானம் நடக்கிறது. மாலையில் ஆயிரத்து எட்டு தீப ஜோதி ஏற்றுதலும், இரவு திருஞானசம்பந்தர், கோமதிசங்கர், வாசுகி மனோகரன் சமய சொற்பொழிவு, புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, பக்தி இன்னிசை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், பிரதோஷ விழா அமைப்பாளர் ராஜா செய்து வருகின்றனர்.