பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
நகரி: திருப்பதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 25 மணி நேர அங்கப்பிரதட்சணமாக, திருமலை மலைப் பாதையை கடந்து, திருமலைக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதியில், பலிஜபள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரன், 27. இவர், கடந்த வெள்ளிக்கிழமை காலை, 9:00 மணிக்கு, திருப்பதி அலிபிரி டோல்கேட் அருகில் இருந்து, அங்கப்பிரதட்சணமாக திருமலைக்கு புறப்பட்டார். யாருடைய உதவியும் இல்லாமல், 25 மணி நேரம், அங்கப்பிரதட்சணமாக, மலைப் பாதை வழியாக, ஏழு மலைகளை கடந்து, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, திருமலை கருடாத்ரி நகர் டோல்கேட் பகுதிக்கு வந்தார். பின் அவர், பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும், "திவ்யதரிசன டோக்கன் மூலம், திருமலை கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.