பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
எடுத்த செயலைக் கருத்துடன் நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!
இந்த மாதம் உங்கள் ராசிக்கு கேது, சுக்கிரன் முழு அளவிலும் மாத பிற்பகுதி நாட்களில் குருவும் நல்ல பலன்களை வழங்குகின்றனர். சந்தோஷ எண்ணங்கள் மனதை உற்சாகப்படுத்தும். குடும்பத் தேவைக்கான பணவசதி சீராக இருக்கும். தாயின் ஆசி கிடைத்து மன ஆறுதல் பெறுவீர்கள். புத்திரர்களுக்கு அறிவுரை சொல்வதிலும் கண்டிப்பதிலும் நிதானம் வேண்டும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்தை கூடுதல் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளவும்.கடன்கள் நிர்ப்பந்தம் செய்யும். எனவே, புதிய கடன் பெற்று ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்பநலன் பாதுகாப்பர். உறவினர் இல்ல சுபநிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழிகாட்டுதல் மனதிற்கு ஊக்கம் தருவதாக அமையும்.தொழிலதிபர்கள் அளவான உற்பத்தி, அதற்கேற்ப பணவரவு என்கிற நிலையை அடைவர். வியாபாரிகள் புதிய திட்டங்களால் விற்பனையில் ஓரளவு முன்னேற்றம் காண்பர். சுமாரான லாபம் தான் என்றாலும், பழைய பாக்கி வரவால் பணநிலை ஓரளவு சரளமாக இருக்கும். பணியாளர்கள் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை கவனத்தில் கொண்டு கூடுதல் நேரம் பணிபுரிவர். பரிசும் சலுகைகளும் கிடைக்கும்.குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். சேமிப்பு பணத்தில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் ஒருமித்த மனதுடன் செயல்பட்டு பணிகளை வேகமாக முடிப்பர். தாமதமான சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் கூடுதல் ஆர்டர் பெறுவர். உற்பத்தி, விற்பனை செழித்து பணவரவு கூடும்.அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை சமாளித்து திட்டங்களை நிறைவேற்ற அனுகூலம் உண்டு. விவசாயிகள் பயிர் வளர்ப்பில் அதிக செலவை எதிர்கொள்வர். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். மாணவர்களுக்கு மேல்படிப்புக்காக எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்க சிரமப்பட வேண்டியிருக்கும்.
உஷார் நாள்: 20.5.13 காலை 8.16- 22.5.13 மதியம் 1.45.
வெற்றி நாள்: ஜூன் 4, 5, 6
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 4, 5
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் கடன் தொந்தரவு குறையும்.