பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காணும் மீனராசி அன்பர்களே!
அஷ்டமச்சனியின் தாக்கத்தினால் பல சிரமங்களை எதிர்கொண்ட உங்களுக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளனர். எனவே, சனியின் தாக்கம் தந்த கஷ்டம் குறைந்து மனதில் புத்துணர்வு ஏற்படும். உங்கள் சந்தோஷத்தின் வெளிப்பாடு உங்களின் ஒவ்வொரு செயலையும் திறமை நிறைந்ததாக உருவாக்கும். உழைப்பின் மூலம் நிறைந்த பணவரவு பெறுவீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நல்லவிதமாக நிறைவேறும். புத்திரர்கள் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். உடல்நலம் சிறந்து கூடுதல் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடன் நடந்து குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவர். நண்பர்கள் உங்களின் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டுவர தம்மால் இயன்ற முயற்சிகளை மனமுவந்து மேற்கொள்வர். வெளியூர் பயணம்புதிய அனுபவம் பெற்றுத்தரும். தொழிலதிபர்கள் உற்பத்தியில் இருந்த சுணக்கம் விலகி வளமும் உபரி வருமானமும் பெறுவர். வியாபாரிகள் தாராள நிதிவசதி கிடைத்து அபிவிருத்தி பணிகளைச் செய்வர். விற்பனை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பும் சலுகைகளும் பெறுவர்.குடும்பப் பெண்கள் கணவர் வழி சார்ந்த உறவினர்களை நன்றாக உபசரித்து பாசத்தைப் பெறுவர். ஆடை, ஆபரணம் பணவசதிக்கேற்ப வாங்க அனுகூலம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக ஆர்டர்களைப் பெற முயற்சியுடன் செயல்படுவர். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து ஆதரவாளர்களின் கோரிக்கையை எளிதில் நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு தாராள மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டு. மாணவர்களின் மேல்படிப்புக்கு எதிர்பார்த்த கல்லூரியில் இல்லாவிட்டாலும் ஓரளவு சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உஷார் நாள்: 22.5.13 மதியம் 1.46- 24.5.13 மாலை 5.04.
வெற்றி நாள்: ஜூன் 7, 8, 9
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 7, 8
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் தன்னம்பிக்கை பிறக்கும்.