பதிவு செய்த நாள்
09
மே
2013
11:05
ஈரோடு: தமிழகத்தில் மழை வேண்டியும், வறட்சி நீங்கவும், கோட்டை பெருமாள் கோயிலில் புஷ்பயாகம் நடக்கிறது.தமிழகம் முழுவதும் மழையின்றி, கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை வேண்டி, நூதன வழிபாட்டை பொதுமக்கள் செய்து வருகின்றனர். ஈரோடு கோட்டை பெருமாள் கோயில் சில வாரத்துக்கு முன், மழை வரம் கேட்டு, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் பெருமாளுக்கு, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.இந்நிலையில், கோட்டை பெருமாள் கோயிலில் மழை வேண்டி, ஸ்ரீஎம்பெருமானார் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், மே, 13ம் தேதி இரவு, 7 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. உதிரிப்பூக்கள் கொடுக்க விரும்பும் பொதுமக்கள், மே, 13ம் தேதி மாலை, 5 மணி முதல், கோயிலில் புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். கடந்த ஆண்டு, அட்சஷ திரிதியை அன்று, புஷ்பயாகம் நடத்தப்பட்டது. அன்றே, ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.