பதிவு செய்த நாள்
13
மே
2013
10:05
பெரம்பலூர்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்ட விழா வெகுவிமர்சையாக நடந்தது. விழாவிவையொட்டி கடந்த, 3ம் தேதி மாலை, 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதைத் தொடர்ந்து, 4ம் தேதி மாலை பூவால கொப்பரை எனும் நிகழ்ச்சியும், 5ம் தேதி மாலை மும்மூர்த்தி புறப்பாடும், 6ம் தேதி மாலை வீரபத்திரர் படம் தட்சண யாகம் அழிக்கும் நிகழ்ச்சியும், 7ம் தேதி மாலை வல்லாளராஜன் கோட்டை இடித்தல், பிள்ளைப்பாவு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி காலை, 6 மணிக்கு அலகு நிறுத்தல் மற்றும், 12 மணிக்கு மயான கொள்ளையிடுதல் நிகழ்ச்சியும், 9ம் தேதி அக்னிமிதித்தல் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பத்தாம் தேதி காட்டுகோவில் பொங்கல் வைத்தல், முடி எடுத்தல், சேலை படைத்தல் போன்ற நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் நேற்று விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில்தக்கர் அருணகிரி மற்றும் அகமுடையார் சமூக நலசங்கம், சாமி குடிகள், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.