கோவை : ஆலாந்துறை அருகே கிளியகவுண்டன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 8ம் தேதி பூவோடு கம்பம் நடுதலுடன் துவங்கியது. நேற்றிரவு சக்தி கரக அழைப்புக்காக நொய்யல் நதிக்கு தாரை, தப்பட்டையுடன் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, அம்மன் அலங்கார பூஜை, பொங்கல் வைத்தலும் நடக்கிறது. தொடர்ந்து, மதியம் நொய்யல் நதியிலிருந்து 201 பக்தர்கள் பூவோடு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை மாவிளக்கு, மதியம் முளைப்பாரி எடுத்தல் நடத்தப்பட்டு, மாலை அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. இறுதியாக, வரும் 17ம் தேதி மதியம் அம்மனுக்கு அபிஷேக பூஜையுடன் விழா முடிகிறது.