உளுந்தூர்பேட்டை:பாதூர் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கெங்கையம்மன் கோயிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு சாகை வார்த்தலையொட்டி அப்பகுதி மக்கள் கூழ் குடங்களை தலையில் ஏந்தி ஊர்வலமாக சென்று சுவாமிக்கு படைத்தனர். மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அன்றிரவு நடந்த வீதியுலாவின்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகெங்கையம்மன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிங்காரவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.