செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தேர் கட்டும் பணி நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தேரின் பாகங்களை செய்து ஒன்றிணைக்க உள்ளனர்.இதற்கான சிற்ப வேலைகள் நடந்து வருகின்றன. திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து தேர் சக்கரங்களை வரவழைத்துள்ளனர். தேரின் முதல் நிலையுடன், தேர் சக்கரங்களை இணைக்கும் பணிகளை துவங்க உள்ளனர்.முன்னதாக சத்தியமங்கலம் குமார் பட்டாச்சாரியார் தலைமையில் சுதர்சன ஹோமம் நடந்தது.இதில் தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, குணசேகர், ஊராட்சி தலைவர் ரங்கநாதன், உபயதாரர்கள் செல்வநாதன், திருஞானசம்பந்தம், ரங்கநாதன், முனுசாமி, திருமுருகன் சுரேஷ், ரங்கராஜ், சிதம்பரம் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.