பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
ஆத்தூர்: ஆத்தூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில், மழை பெய்ய வேண்டி, ஏழு வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.ஆத்தூர் நகராட்சி, 13வது வார்டு, கம்பர் பெருமாள் கோவில் தெருவில், வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, மூலவர் ஆஞ்சநேயர், வடக்கு திசை நோக்கி, அபூர்வ மூர்த்தி ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். நேற்று, வைகாசி முதல் தேதி முன்னிட்டு, மழை வேண்டி, பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், விபூதி என, ஏழு வகையான அபிஷேக பூஜைகள் நடந்தது. பின்னர், சந்தனக் காப்பு, வெள்ளிக் கவசம், வெற்றிலை, வடை மாலை என, சர்வ சிறப்பு அலங்காரத்தில், வீரஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.