பாபநாசம்: பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை திருக்கோவிலின் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் வைகாசி பெருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி பல்லக்கில் வீதியுலா காட்சியும், மாலையில் அம்மாபேட்டை புலவர் தமிழ்சேரனார் வழங்கும் பக்தி சொற்பொழிவும், காளிதாஸ் குழுவினர் வழங்கும் நகைச்சுவை பட்டி மன்றமும் நடந்தது. இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக காலையில் சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா காட்சியும், மாலையில் சஹானா கர்நாடக இசை கச்சேரியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், கிராமத்தினரும், உபயதாரர்களும் செய்து வருகின்றனர்.