சேத்தூர்: தேவதானம் உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களிள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் வழங்குவர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடை அறங்காவலர் துரை ராஜசேகர், செயல் அலுவலர் சுப்பிரமணியன், இணை ஆணையர் தனபால் செய்து வருகின்றனர்.