பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
தஞ்சாவூர்: தஞ்சையில், புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தஞ்சை நகர பக்தர்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று, வழிபாடு நடத்தினர். தஞ்சையில், வடக்குவீதி ராணி வாய்க்கால் தெருவில் சியாமளாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அபிஷேக ஆராதனை, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோவிலில் இருந்து, பக்தர்கள் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்துக்கொண்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம் ஆகியவை செய்து, அம்மனை தஞ்சை நகர பக்தர்கள் வழிபட்டனர். தஞ்சையில் கோடை வெய்யிலையும் பாராமல், பக்தர்கள் பால் குடம் எடுத்து, ஊர்வலமாகச் சென்றனர். இவர்களுக்கு வழிநெடுக அந்தந்த பகுதியினர் நீர்மோர், தண்ணீர் கொடுத்து, உபசரித்தனர்.