பதிவு செய்த நாள்
20
மே
2013
10:05
சேலம்: சேலம், லீபஜார் வர்த்தக சங்கத்துக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று யாக சாலை பூஜைகள் துவங்கின.
சேலம், லீபஜார் வர்த்தக சங்கத்துக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மே, 22ல் நடக்கிறது. அøத் முன்னிட்டு, நேற்று காலையில் யாக சாலை பூஜைகள் விநாயகர் பூஜை, அனுக்ஞை புண்யாகம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமங்கள், பூர்ணாகுதியுடன் துவங்கியது. இன்று காலை மங்கள இசை, திருமுறை பாராயணம், விசேஷ சந்தி, கஜ பூஜை, கோ பூஜை, விநாயகர் பூஜை, புண்யாகம், அஸ்வ பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், மூலமந்திர ஹோமங்கள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியன நடக்கிறது. மாலையில், கோபுர கலசம் வைத்தல், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜைகள், மாலாமந்திர ஹோமங்கள், திரவியாகுதி, பூர்ணாகுதி செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை காலையில், நான்காம் கால யாக பூஜைகள், காயத்ரி மந்திர ஹோமங்கள் நடக்கிறது. மாலையில், ஐந்தாம் கால யாக பூஜைகள், மந்திர ஹோமங்கள் தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மே, 22 அதிகாலையில், ஆறாம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, மஹாபூர்ணாகுதி, யாத்ராதானம், கிரஹப்ரிதியை தொடர்ந்து விநாயகர், காளியம்மன், வீர ஆஞ்சநேயர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மதியம் மஹா அபிஷேகம் நடக்கிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காமராஜ், கோபிநாதன், கோவிந்தராஜ், சரவணபெருமாள், சிதம்பரநாதன், செல்வகுமார், தட்சணாமூர்த்தி, திருமுருகன், திலகர், ராமசாமி, ஜெயப்பிரகாசம் ஆகியோர் செய்து வருகின்றனர்.